மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மீனவர் பிரச்னையில் கச்சத்தீவை மீட்பதே தீர்வு: திருமாவளவன்

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்தியஅரசு தலைமை கணக்கு அதிகாரி ஏதேனும் ஒரு அறிக்கையை வெளியிட்டு நாட்டு நலன் கருதி இல்லாமல், அரசை பலவீனப்படுத்தவதற்காக அரசியல் செய்வதாக கருத முடிகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

News image
Updated On :9 மார்ச் 2013, 12:00 pm

G.Sundararaj

ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது மத்தியஅரசு தலைமை கணக்கு அதிகாரி ஏதேனும் ஒரு அறிக்கையை வெளியிட்டு நாட்டு நலன் கருதி இல்லாமல், அரசை பலவீனப்படுத்தவதற்காக அரசியல் செய்வதாக கருத முடிகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ஹெலிகாப்டர் ஊழல், வேளாண் கடன் தள்ளுபடி ஊழல் என பல்வேறு சிக்கல்களை உருவாகியுள்ளதற்கு தலைமை கணக்கு அதிகாரியே காரணாமாவார். ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என இந்திய அரசு தீர்மானம் முன்மொழிய வேண்டும். தமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ராஜபட்சேயின் இனப்படுகொலையை கண்டித்து டெசோ அமைப்பின் தலைவர் கருணாநிதி மார்ச் 12-ம் தேதி பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். கட்சி வித்தியாசம் பாராமல் ஒட்டுமொத்த தமிழர்களும் ஆதரிக்க வேண்டும். இந்தியஅரசு ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இல்லாமல், சிங்களர்களுக்கு துணை போகும் நடவடிக்கை தொடருமேயானால் தமிழக மக்களின் அதிருப்தியை சந்திக்க நேரிடும். எனவே இனப்படுகொலை குறித்து இந்திய அரசு வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

மத்தியஅரசு நிதிநிலை அறிக்கையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் சிறப்பு உட்கூறு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏமாற்றம் அளிக்கிறது. பிறநாடுகளை ஒப்பிடுகையில் கல்வி வளர்ச்சிக்கு மத்தியஅரசு குறைந்தளவே நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. புவனேஸ்வர்-ராமேஸ்வரம் செல்லும் விரைவு ரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்கான அறிவிப்பு ரயில்வே பட்ஜெட்டில் வெளியிடாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. எனது கோரிக்கையை ஏற்று ராஜஸ்தான் பிசானரியிலிருந்து சென்னை ரயில் விடப்படும் என்ற அறிவிப்பினை வரவேற்கிறேன். பொது நிதிநிலை அறிக்கையிலும், ரயில் நிதிநிலை அறிக்கையிலும் திருப்திகரமான அறிவிப்புகள் ஏதும் இல்லை. ஏப்.14-ல் நடைபெற இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொன்விழா நிறைவு மாநாடு ஆக.17-ம் தேதி நடத்தப்படும்.

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் பிரச்னையில் சிங்களர்களிடம் ஒப்படைத்த நமது கச்சத்தீவை மீட்பதன் மூலம் தான் தீர்வு கிடைக்கும். மீனவர்களை கடல்சார் பழங்குடியினர் என அறிவித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்ற சூழல் எதுவும் இல்லை என தெரிவித்தார்.

பேட்டியின் போது மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன் (கடலூர் தெற்கு), வழக்குரைஞர் தாமரைச்செல்வன் (கடலூர் கிழக்கு), தயாதமிழன்பன் (கடலூர் மேற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.